தமிழக டி.ஜி.பி.,க்கு மகளிர் கமிஷன் நோட்டீஸ்
தமிழக டி.ஜி.பி.,க்கு மகளிர் கமிஷன் நோட்டீஸ்
தமிழக டி.ஜி.பி.,க்கு மகளிர் கமிஷன் நோட்டீஸ்
ADDED : ஜூன் 24, 2024 06:42 AM
சென்னை : 'மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதுாறாக பேசிய, இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மூன்று நாளில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக டி.ஜி.பி.,க்கு, தேசிய மகளிர் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
சென்னை பெருங்குடியில், ஜூன், 17ல், தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில், பட்டிமன்ற பேச்சாளர் இனியவன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி அவதுாறாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., நிர்வாகிகள், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, தேசிய மகளிர் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 'இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.