Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எதற்கு?" - மத்திய அமைச்சர் முருகன் கேட்கிறார்

"முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எதற்கு?" - மத்திய அமைச்சர் முருகன் கேட்கிறார்

"முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எதற்கு?" - மத்திய அமைச்சர் முருகன் கேட்கிறார்

"முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எதற்கு?" - மத்திய அமைச்சர் முருகன் கேட்கிறார்

UPDATED : ஜூன் 30, 2024 12:59 PMADDED : ஜூன் 30, 2024 12:29 PM


Google News
Latest Tamil News
சென்னை: 'அமெரிக்கா பயணம் எதற்கு என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பது, கலாசாரத்தை பாதுகாப்பது குறித்து மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்க பயணம் எதற்கு என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

எத்தனை நிறுவனங்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எத்தனை நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் என்பது தெரியும். அமெரிக்கா சென்று வந்த பிறகு, அவர்களது செயல்பாடுகள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கும் போது தான், அதன் பயன் நமக்கு தெரியும். ஏற்கனவே ஸ்பெயின் போன முதல்வர் ஸ்டாலின் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு? ஸ்பெயின் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை முதலில் வெளியிடுங்கள்.

சி.பி.ஐ., வசம் ஒப்படையுங்கள்!

கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். போலீசாரை கையில் வைத்திக்கும், முதல்வர் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டியலின மக்களுக்கான நலத்திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us