தேர்தலில் பா.ஜ., தோல்வி ஏன்? கருத்தறியும் கூட்டத்தில் ரகளை
தேர்தலில் பா.ஜ., தோல்வி ஏன்? கருத்தறியும் கூட்டத்தில் ரகளை
தேர்தலில் பா.ஜ., தோல்வி ஏன்? கருத்தறியும் கூட்டத்தில் ரகளை

தொகுதி வாரியாக
'பூத் கமிட்டி' நிர்வாகிகளை உள்ளடக்கிய தேர்தல் செலவுக்கு, கட்சி மேலிடம் தலா ஒரு தொகுதிக்கு, 15 கோடி ரூபாய் வரை வழங்கியதாக கூறப்படும் நிலையில், இந்த பணத்தை மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் முறையாக வழங்காமல் பதுக்கிவிட்டதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன.
மோதல் சூழல்
அதை தொடர்ந்து, தி.நகர் மற்றும் சைதை தொகுதிக்கான கூட்டம், தி.நகரில் நடந்தது. அங்கும் ஒரு நிர்வாகி, 'காளிதாஸ், ஜாதி அரசியல் செய்கிறார்; அவர் கட்சியினரை மதிக்கவில்லை' என, குற்றஞ்சாட்டினார். இதற்கும், காளிதாஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மோதல் சூழல் உருவானது.
உரிய நடவடிக்கை
'இந்த கூட்டத்தை சிறிது நேரம் மட்டும் நடத்தி, அரைகுறையாக கேட்டு செல்லக் கூடாது; நீண்ட நேரம் நடத்தி கருத்துக்களை முழுமையாகக் கேட்டு, அதை கட்சித் தலைமைக்குக் கொண்டு செல்ல வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.