Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ என்னது... கட்டட அனுமதியே தேவையில்லையா! மக்கள் மத்தியில் பரவுகிறது தவறான தகவல்

என்னது... கட்டட அனுமதியே தேவையில்லையா! மக்கள் மத்தியில் பரவுகிறது தவறான தகவல்

என்னது... கட்டட அனுமதியே தேவையில்லையா! மக்கள் மத்தியில் பரவுகிறது தவறான தகவல்

என்னது... கட்டட அனுமதியே தேவையில்லையா! மக்கள் மத்தியில் பரவுகிறது தவறான தகவல்

ADDED : ஜூன் 25, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
கோவை:பொதுமக்கள் பயன் பெறும் வகையில், 2,500 சதுரடி நிலத்தில், 3,500 சதுரடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு, இனி கட்டட அனுமதி தேவையில்லை என, பொதுமக்கள் பலர் மத்தியில் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.

'தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 3,500 சதுரடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு, சுய சான்று வாயிலாக அனுமதி வழங்கப்படும். அவர்கள் கட்டட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுபற்றி பொதுமக்கள் பலர் மத்தியில், குறிப்பிட்ட பரப்பளவுக்கு கட்டட அனுமதியே தேவையில்லை என்ற தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கொசினா முன்னாள் தலைவர் பாலமுருகன் கூறியதாவது:

கட்டட அனுமதிக்கு ஏற்படும் காலதாமதத்தை களைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு சில அறிவிப்புகளை அரசு அறிவித்துள்ளது. கட்டட அனுமதிக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, கட்டட அனுமதி எண், உத்தரவு நாளுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கட்டடப் பணிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்ற தகவலை, பொதுமக்கள் பலர் தவறாக புரிந்து கொண்டு, கட்டட அனுமதியே தேவையில்லை என்கிற எண்ணத்தில் புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என்று ,பொறியாளர்களை பலர் கேட்டு வருகின்றனர்.

தற்சமயம், கட்டட அனுமதிக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, தக்க அலுவலர் கள ஆய்வு மற்றும் இதர கோப்பு சரிபார்ப்பு என, நிறைய பணிகளுக்கு நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையை சீரமைக்க வேண்டி, 2,500 சதுரடி பரப்பளவு உள்ள மனையில், 3,500 சதுரடி வரை கட்டடம் கட்டலாம்; கட்டட விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பக்க திறவிடம், கட்டட உயரம், சாலையின் முன்பக்க திறவிடம் அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விதிமுறைகள் முக்கியம்


விதிகளுக்கு உட்பட்டு தான் கட்டடம் கட்டுவோம் என, கட்டட உரிமையாளர் சுய சான்று சமர்ப்பிக்க வேண்டும். விதிமீறல் இருக்கக் கூடாது. இந்த விதிகளுக்கு ஏற்ப கட்டட பணிகளை துவக்கலாம்.

கட்டுமானம் துவங்கும் முன், தக்க முறையில் ஆன்லைன் வாயிலாக வரைபடம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களை முறையாக சமர்ப்பித்து இருக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். பின், அரசு தரப்பில் இருந்து உரிய காலத்தில் கட்டட அனுமதி தரப்படும்.

இதனால், வீடு கட்டும் பணிக்கான கால தாமதம் தவிர்க்கப்படும்.

வங்கிக் கடன் வாங்கி, வீடு கட்டுவோர் பயன் பெறுவர்.

நிறைவுச்சான்று தேவையா


3,500 சதுரடி குடியிருப்புக்கு கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை. 750 சதுர மீட்டருக்குள், 8 குடியிருப்பு வரை கட்டட நிறைவு சான்று தேவையில்லை.

ஆனால், 8 குடியிருப்பும் கட்டட விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டிருக்க வேண்டும். இதற்கு கட்டட அனுமதி அவசிய தேவை.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us