/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ என்.ஜி.பி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு என்.ஜி.பி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
என்.ஜி.பி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
என்.ஜி.பி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
என்.ஜி.பி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 25, 2024 12:18 AM

கோவை;காளப்பட்டி ரோடு, டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் புத்தாக்க நிகழ்ச்சி நடந்தது.
டாக்டர் என்.ஜி.பி., கல்விக்குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணிதேவி பேசகையில், ''கல்லுாரி படிப்பு என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கிய தருணம். இதில், மாணவர்கள் தங்களுக்கென குறிக்கோளை உருவாக்கி, அதில் வெற்றி பெற தேவையான திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி பல மாழிகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
டாக்டர் என்.ஜி.பி., கல்விக்குழுமங்களின் இயக்குனர் முத்துசாமி, கல்லுாரி முதல்வர் ராமமூர்த்தி மற்றும் இளங்கலை மாணவர்கள், பெற்றோர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.