/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகன் பெயரில் 'ரிசர்வ் சைட்' கிரயம் செய்ததாக பேரூராட்சி தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மகன் பெயரில் 'ரிசர்வ் சைட்' கிரயம் செய்ததாக பேரூராட்சி தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மகன் பெயரில் 'ரிசர்வ் சைட்' கிரயம் செய்ததாக பேரூராட்சி தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மகன் பெயரில் 'ரிசர்வ் சைட்' கிரயம் செய்ததாக பேரூராட்சி தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மகன் பெயரில் 'ரிசர்வ் சைட்' கிரயம் செய்ததாக பேரூராட்சி தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 12:19 AM

போத்தனூர்;ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், தனது பதவியை ராஜினாமா செய்ய கோரி, 'இண்டியா' கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வெள்ளலூர் பேரூராட்சி தலைவராக இருப்பவர், அ.தி.மு.க.,வை சேர்ந்த மருதாசலம். இங்குள்ள அபிராமி கார்டனில் உள்ள, சுமார் ஐந்து சென்ட் ரிசர்வ் சைட்டை, மருதாசலம் தனது மகனும், பேரூராட்சியின் ஒன்றாவது வார்டு கவுன்சிலருமான கார்த்திகேயன் பெயரில், 2012ல் கிரையம் செய்தார்.
இவர் மீது நடவடிக்கை கோரி, வெள்ளலூர் பகுதி தி.மு.க., நிர்வாகி ராஜூ தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டு, கோர்ட்டுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நடவடிக்கைக்கு கோர்ட் அறிவுறுத்தியது.
மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மருதாசலம் மீது வழக்கு பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) செந்தில்குமாருக்கு உத்தரவிட்டார்,
செந்தில்குமார் புகாரில், போத்தனூர் போலீசார் மருதாசலம் மீது, கடந்த இரு நாட்களுக்கு முன் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், 'இண்டியா' கூட்டணி கட்சியின் சார்பில், நேற்று வெள்ளலூர் பஸ் திருப்பத்தில், தலைவர் பதவியிலிருந்து மருதாசலம் ராஜினாமா செய்யக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மருதாசலத்தை கண்டித்தும், பதவி விலக கோரியும் கோஷமிட்டனர்.
மதுக்கரை ஒன்றிய தி.மு.க., செயலாளர் விஜயசேகரன், வெள்ளலூர் நகர தி.மு.க., செயலாளர் ராஜு, வெள்ளலூர் நகர காங்., தலைவர் கண்ணன், மாவட்ட பொது செயலாளர் மணி, வெள்ளலூர் நகர கம்யூ., கட்சி பொறுப்பாளர் வரதராஜ் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். 60 பெண்கள் உட்பட 180 பேர் பங்கேற்றனர்