தேர்தல் கமிஷன் கிடங்குகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
தேர்தல் கமிஷன் கிடங்குகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
தேர்தல் கமிஷன் கிடங்குகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஜூன் 07, 2024 02:01 AM

சென்னை, ''லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், தேர்தல் கமிஷனுக்கு சொந்தமான கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க, தேர்தல் கமிஷனுக்கு சொந்தமான கிடங்குகள் உள்ளன.
மேலும், புதிய மாவட்டங்களில் கிடங்குகள் கட்ட, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும், கிடங்கு கட்டப்படும். லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர விரும்புவோர், 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
அதுவரை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அப்படியே வைக்கப்படும். அதன்பின் நீதிமன்ற உத்தரவுகள் ஏதேனும் வந்தால், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நடவடிக்கைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர் விண்ணப்பம் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.