விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
ADDED : ஜூன் 11, 2024 09:41 PM

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட, அன்னியூர் சிவா நிறுத்தப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல், ஜூலை 10 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கி, ஜூன் 21ம் தேதி முடிகிறது.
மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ம் தேதி நடக்கிறது. வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 26ம் தேதி. அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 13 அன்று நடக்கிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில், அன்னியூர் சிவா, போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் பயோ டேட்டா
பெயர் : அன்னியூர் அ.சிவா என்ற சிவ சண்முகம் , வயது 53.
பிறந்த தேதி : 03.04.1971
தொழில் : விவசாயம்
தந்தை : அரியபுத்திரன்
தாய் : ஜெயலட்சுமி
மனைவி : வனிதா
மகள் : ஹர்ஷதா சுடர், 15; 10ம் வகுப்பு
மகன் : திரிலோக் ஹரி, 14; 9ம் வகுப்பு
படிப்பு : பி.ஏ.,
கட்சியில் இணைந்த ஆண்டு : 1987
கட்சி பொறுப்புகள் :
1989: காணை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்
1996: அன்னியூர் கூட்டுறவு வங்கித்தலைவர்
2003: விழுப்புரம் மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர்
2020: மாநில விவசாய அணி துணை அமைப்பாளர்
2022 முதல்: மாநில விவசாய தொழிலாளர் அணி செயலர்.