ADDED : ஜூன் 11, 2024 09:44 PM

ஜூன் 12, 1895
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அருகில் உள்ள பள்ளியாடி கிராமத்தில் அப்பாவு - ஞானம்மாள் தம்பதியின் மகனாக, 1895ல் இதே நாளில் பிறந்தவர் நேசமணி.
திருவனந்தபுரம் மகாராசா கல்லுாரியில் பி.ஏ., படித்து ஆசிரியராகவும்; சட்டக் கல்லுாரியில் பி.எல்., படித்து, வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஜாதி பாகுபாட்டை அங்கீகரிக்கும் வகையில் நாற்காலி, குந்துமனை, குடிநீர் பானைகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்ததை ஒழித்தார். நாகர்கோவில் எம்.எல்.ஏ., ஆகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் ஆனார்.
தமிழர்கள் வாழ்ந்த கன்னியாகுமரி, சுதந்திரத்துக்கு பின்னும் கேரளாவுடன் இருந்ததை எதிர்த்து போராடி, 1956, நவம்பர் 1ல், தமிழகத்துடன் இணைக்க காரணமானார். இதனால், 'மார்ஷல்' என அழைக்கப்பட்டார். நாகர்கோவில் எம்.பி.,யாகவும் தேர்வாகி, மக்களுக்கு கட்சி சார்பின்றி சேவை செய்து, தன் 73வது வயதில், 1968, ஜூன் 1ல் மறைந்தார்.
'குமரியின் தந்தை' பிறந்த தினம் இன்று!