Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மாநகராட்சி கடை ஏலம் முறைகேடு தஞ்சையில் விஜிலென்ஸ்   விசாரணை

மாநகராட்சி கடை ஏலம் முறைகேடு தஞ்சையில் விஜிலென்ஸ்   விசாரணை

மாநகராட்சி கடை ஏலம் முறைகேடு தஞ்சையில் விஜிலென்ஸ்   விசாரணை

மாநகராட்சி கடை ஏலம் முறைகேடு தஞ்சையில் விஜிலென்ஸ்   விசாரணை

ADDED : ஜூன் 17, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட், திருவையாறு பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் 91 கடைகள், சரபோஜி மார்க்கெட்டில் 302 கடைகள், காமராஜ் மார்க்கெட்டில் 288 கடைகள், திருவள்ளுவர் தியேட்டர் வணிக வளாகம், காந்திஜி வணிக வளாகம் என, 1,000த்திற்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டன.

கடந்த 2021ல் மாநகராட்சி கமிஷனராக இருந்த சரவணகுமார், மாநகராட்சி வருவாயை பெருக்க, புதிய கடைகளை திறந்தவெளி ஒப்பந்த முறையில் வாடகைக்கு ஏலம் விட்டார். இதில், லட்சக்கணக்கில் வைப்புத்தொகையும், வாடகையும் உயர்ந்தன.

ஆனால், கடைகளை ஏலம் எடுத்தவர்கள், வாடகை அதிகம் எனக் கூறி, ஓராண்டிற்குள்ளாக கடைகளை திருப்பி ஒப்படைத்தனர். பின், சரவணகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் ராமநாதன், கடை வாடகையை குறைத்து தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு, தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

சரவணகுமார் கமிஷனராக இருந்தபோது நடந்த கடைகளுக்கான ஏலத்தில் விதிமீறல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இவை தொடர்பாக, நகராட்சி நிர்வாக இயக்குனரக அலுவலர்கள் குழு, கடந்த ஆண்டு ஆவணங்களை தணிக்கை செய்து, முறைகேடுகளை உறுதி செய்தது.

இதையடுத்து, 2023 நவ., 16ல், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க, நகராட்சி நிர்வாக இயக்குனர் பரிந்துரை செய்தார். அதன்படி, மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., மனோகரன் தலைமையிலான குழுவினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தற்போது கமிஷனராக உள்ள மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தி, முந்தைய மூன்று நிதியாண்டுகளில் வியாபாரிகளுக்கு கடைகள் ஏலம் விடப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us