/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுக்கு தியாகி என்.ஜி.ஆர்., பெயர் வையுங்க சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுக்கு தியாகி என்.ஜி.ஆர்., பெயர் வையுங்க
சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுக்கு தியாகி என்.ஜி.ஆர்., பெயர் வையுங்க
சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுக்கு தியாகி என்.ஜி.ஆர்., பெயர் வையுங்க
சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுக்கு தியாகி என்.ஜி.ஆர்., பெயர் வையுங்க
ADDED : ஜூன் 17, 2024 12:30 AM
கோவை;தியாகி என்.ஜி.ஆர்., பெயரை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுக்கு வைப்பதுடன், அவருக்கு நினைவு மண்டபம் கட்டவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க (எச்.எம்.எஸ்.,) பொதுக்குழு கூட்டம், தலைவர் ராஜாமணி தலைமையில் நடந்தது. இதில், 'கடந்த, 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கோவையில் தலைமை தாங்கி போராடியவர் தியாகி என்.ஜி.ராமசாமி.
இவரது சமாதி நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அதை மேம்படுத்தி நினைவு மண்டபம் கட்டி நினைவஞ்சலி செலுத்திடவும், அரசு நிகழ்வாக கடைபிடிக்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த, 1942ம் ஆண்டு ஆக., 13ம் தேதி நள்ளிரவு, 2:00 மணிக்கு அருவங்காட்டில் இருந்து ராணுவ தளவாடங்களை ஏற்றிவந்த சரக்கு ரயிலின், 12 பெட்டிகளை சிங்காநல்லுார் குளத்தில் தியாகிகள் கவிழ்த்தனர்.
தொடர்ந்து, ஆக்., 26ல் சூலுார் ராணுவ விமான நிலையத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில், 22 ராணுவ லாரிகள் எரிந்து சாம்பலாகின. கண்ணம்பாளையம், பள்ளபாளையம், இருகூர் கள்ளுக்கடைகளை தீயிட்டு கொளுத்தினர்.
இதுபோன்ற போராட்டங்களை நடத்திய என்.ஜி.ஆர்., பெயரை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுக்கு வைத்து கவுரவிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் மனோகரன், செயலாளர்கள், உதவி செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.