கணக்கில் வராத பணம்: இருவருக்கு 3 ஆண்டு
கணக்கில் வராத பணம்: இருவருக்கு 3 ஆண்டு
கணக்கில் வராத பணம்: இருவருக்கு 3 ஆண்டு
ADDED : ஜூன் 01, 2024 02:18 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது கணக்கில் வராத பணம் வைத்திருந்த டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2013 ஜூலை10ல் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஸ்டார் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் கனகராஜ் என்பவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.47 ஆயிரத்து 230ம், ராமராஜ் என்பவரிடமிருந்து ரூ. 17 ஆயிரத்து 100, அலுவலக உதவியாளர் வீரக்குமார் என்பவரிடமிருந்து ரூ. 900யையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கனகராஜ் மற்றும் ராமராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.இதில் கனகராஜ் மற்றும் ராமராஜிற்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். அலுவலக உதவியாளர் வீரக்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.