Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஓட்டு எண்ணும் போது உணவின்றி இருவர் மயக்கம்

ஓட்டு எண்ணும் போது உணவின்றி இருவர் மயக்கம்

ஓட்டு எண்ணும் போது உணவின்றி இருவர் மயக்கம்

ஓட்டு எண்ணும் போது உணவின்றி இருவர் மயக்கம்

ADDED : ஜூன் 05, 2024 12:53 AM


Google News
பெரம்பலுார்:பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், ஆதவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டு எண்ணும் மையத்தில் நேற்று எண்ணப்பட்டன.

வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆயிரக்கணக்கில் ஓட்டு எண்ணும் மையத்துக்குள் வந்திருந்தனர். காலை 7:30 மணிக்கு ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், போலீசார், நிருபர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு காலை உணவாக இரண்டு இட்லி, பொங்கல், மெது வடை, கேசரி வழங்கப்பட்டது.

இந்த உணவு பொட்டலங்கள் பற்றாக்குறையால், பல முகவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை.

உணவு உண்ணாததால், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முகவர் வி.களத்துார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மயக்கமடைந்தார்; அ.தி.மு.க., முகவர் ஒருவரும் மயக்கமடைந்தார்.

இதனால், உணவு வழங்கக் கோரி பலர் கோஷமிட்டனர். மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் உணவு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதிய அளித்தார். போராட்டம் கைவிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us