மட்டன் பிரியாணி, மீன் வறுவல், சிக்கன் தொக்கு.. : உதயநிதி வீட்டில் உழைத்தோர்களுக்கு விருந்து
மட்டன் பிரியாணி, மீன் வறுவல், சிக்கன் தொக்கு.. : உதயநிதி வீட்டில் உழைத்தோர்களுக்கு விருந்து
மட்டன் பிரியாணி, மீன் வறுவல், சிக்கன் தொக்கு.. : உதயநிதி வீட்டில் உழைத்தோர்களுக்கு விருந்து
UPDATED : ஜூலை 24, 2024 07:05 AM
ADDED : ஜூலை 24, 2024 06:42 AM

சென்னை : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.
தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தவிர, வேறு யாருக்கும் அழைப்பு இல்லை. டாக்டர் கோகுல், மணிமாறன், ஹெலன் டேவிட்சன், அஞ்சுகம், ராணி, முத்துசெல்வி உட்பட 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
உதயநிதி பேசுகையில், ''லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. அதே சிந்தனையில், சட்டசபை தேர்தல் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும்,'' என்றார்.
சீரக சம்பா மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவல், மிளகு கொத்துக் கோழி, மட்டன் கோலா உருண்டை, சிக்கன் தொக்கு, பரோட்டா, முட்டை தோசை, நாட்டுக்கோழி குருமா, தயிர் பச்சடி மற்றும் மாம்பழம் ஸ்வீட் ரோல், முந்திரி பிரட் அல்வா உள்ளிட்ட அசைவம் மற்றும் சைவ உணவு வகைகள், விருந்தில் பரிமாறப்பட்டன.
இந்த உணவு வகைகளை, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குழுவினர் தயாரித்துள்ளனர்.