ADDED : ஜூலை 21, 2024 06:13 AM
சென்னை: தமிழகத்தில் இரண்டு கூடுதல் எஸ்.பி., உட்பட ஒன்பது பேரை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
திருச்சி கூடுதல் எஸ்.பி., - எஸ்.குத்தாலிங்கம், கள்ளக்குறிச்சி கூடுதல் எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், திருப்பத்துார் மாவட்ட தலைமையக கூடுதல் எஸ்.பி., ஜி.முத்துமாணிக்கம் தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் எஸ்.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், மதுரை மேலுார் டி.எஸ்.பி., பி.எஸ்.பிரீத்தியை, ராஜபாளையம் டி.எஸ்.பி.,யாவும், மதுரை சிட்டி உதவி கமிஷனர் எஸ்.வேல்முருகன், மதுரை மேலுார் டி.எஸ்.பி.,யாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.