20 நிமிடத்தில் ரயில் டிக்கெட் காலி
20 நிமிடத்தில் ரயில் டிக்கெட் காலி
20 நிமிடத்தில் ரயில் டிக்கெட் காலி
ADDED : ஜூன் 13, 2024 01:53 AM
சென்னை:ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில், 20 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.
இந்த ஆண்டு ஆயுத பூஜை, அக்., 11ம் தேதி வெள்ளிக் கிழமையும், அதற்கு மறுநாள் 12ம் தேதி சனிக்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது.
50ஐ தாண்டியது
ஆயுத பூஜையை முன்னிட்டு, மூன்று நாட்கள் விடுமுறை தொடர்ச்சியாக வருவதால், அக்., 10ம் தேதி ஊருக்கு செல்வோர் வசதிக்காக, டிக்கெட் முன்பதிவு நேற்று 8:00 மணிக்கு துவங்கியது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களின், 'சிலீப்பர்' பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு 20 நிமிடங்களில் முடிந்தது.
அடுத்து 'ஏசி' வகுப்பு பெட்டிகளிலும் முன்பதிவு நடந்தது. நேற்று மாலை நிலவரப்படி, சில விரைவு ரயில்களில் மட்டுமே, சில டிக்கெட்டுகள் இருந்தன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, முத்துநகர், பாண்டியன், அனந்தபுரி ஆகிய விரைவு ரயில்களின் படுக்கை வசதி பெட்டிகளில், முன்பதிவு 20 நிமிடங்கள் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் 50ஐ தாண்டியது.
80 சதவீதம்
அதிகபட்சமாக, செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை 110 ஆக இருந்தது.
மலைக்கோட்டை ரயில், கோவை செல்லும் நீலகிரி, சேரன் ரயில்களில் சிலீப்பர் பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, ஆர்.ஏ.சி.,க்கு வந்தன.
இணையதளம் வாயிலாக, 80 சதவீதம் டிக்கெட் முன்பதிவும், டிக்கெட் கவுன்ட்டர்கள் வாயிலாக, 20 சதவீதம் முன்பதிவும் நடந்தது. 'ஏசி' பெட்டிகளில் காலியாக உள்ள கணிசமான இடங்களும், அடுத்த ஓரிரு நாளில் நிரம்பி விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.