ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி: மத்திய அமைச்சர் முருகன் பேட்டி
ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி: மத்திய அமைச்சர் முருகன் பேட்டி
ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி: மத்திய அமைச்சர் முருகன் பேட்டி
ADDED : ஜூலை 27, 2024 04:18 PM

சென்னை: 'நீட் தேர்வு மற்றும் நிடி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார். இது ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம் ஓட்டளித்த தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரிய துரோகம் செய்துவிட்டார். அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
குழப்பத்தில் இருக்கிறார் ஸ்டாலின்
தமிழக மக்களுக்கு ஸ்டாலின் எப்போதும் தவறான தகவலை அளித்து வருகிறார். அவர் எப்போதும் குழப்பத்தில் இருக்கிறார். நீட் தேர்வு மற்றும் நிடி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார். இது ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.