பழநியில் யானை தந்தம் விற்க முயன்ற மூவர் கைது
பழநியில் யானை தந்தம் விற்க முயன்ற மூவர் கைது
பழநியில் யானை தந்தம் விற்க முயன்ற மூவர் கைது
ADDED : ஜூன் 17, 2024 12:39 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தத்தை எடுத்து விற்க முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பழநி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் பாலசமுத்திரம் கிழக்கு பீட் பகுதியில் பாறை இடுக்கில் யானை இறந்து கிடந்தது. அப்பகுதிக்கு தேன் சேகரிக்கச் சென்ற பண்ணைக்காடு பகுதி பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண்டி மகன் ராமன் 53, அந்த யானையின் தந்தத்தை எடுத்துள்ளார்.
அதன்பின் கன்னிவாடியை சேர்ந்த சோமசுந்தரம் 49, என்பவரிடம் கொடுத்து விற்றுத் தரக் கூறினார். சோமசுந்தரம் தந்தத்தை விற்க வயலுாரைச் சேர்ந்த கணேசனிடம் 59, பேசியுள்ளார். கன்னிவாடி செம்பட்டி பகுதிகளில் கணேசன் சிலருடன் தந்தத்தை விற்க ரூ. லட்சக்கணக்கில் பேரம் பேசினார்.
இதையறிந்த மதுரை மண்டல வன மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆறு பேர் கொண்ட இக்குழுவினர் கணேசன், சோமசுந்தரம், ராமு ஆகியோரை கைது செய்து விசாரித்ததில் 2 கிலோ எடை 40 செ.மீ., உயரம் கொண்ட 2 தந்தம், 3 டூவீலர், 3 அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடுகின்றனர்.