ADDED : ஜூன் 17, 2024 12:39 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த புதுக்குடியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து 28.
கூலி தொழிலாளி. புதுக்குடி ஊராட்சி அலுவலகம் முன் உள்ள பிள்ளையார் கோயில் முன் மணலில் படுத்து தூங்கினார். அதை கவனிக்காத டிப்பர் லாரி டிரைவர் வீரவநல்லூர் சக்திவேல் 23, மணலை கோயில் முன்பாக கொட்டினார். இதில் மணலுக்குள் சிக்கி பேச்சிமுத்து மூச்சுத் திணறி இறந்தார். சக்திவேலை வீரவநல்லூர் போலீசார் கைது செய்தனர்.