வரும் 27ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்
வரும் 27ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்
வரும் 27ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்
ADDED : ஜூலை 22, 2024 06:53 AM

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், ஒரு வாரமாக பெய்த கனமழை முடிவுக்கு வந்துள்ளது. 'வரும் 27ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, கூடலுாரில், 6 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
சின்னக்கல்லார் 4; சோலையார், வால்பாறை 3; அவலாஞ்சி 2 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழை, தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
வரும் 27ம் தேதி வரை மாநிலம் முழுதும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.