அறநிலையத்துறை அலட்சியத்தால் கோவில்களில் திருட்டு
அறநிலையத்துறை அலட்சியத்தால் கோவில்களில் திருட்டு
அறநிலையத்துறை அலட்சியத்தால் கோவில்களில் திருட்டு
ADDED : ஜூன் 19, 2024 05:48 AM

திருப்பூர் : 'அறநிலையத் துறை, வருமானத்தை மட்டும் குறிக்கோளாய் கொண்டு செயல்படாமல், கோவில்களின் பாதுகாப்புக்கும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவில்களின் உண்டியல் திருட்டு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், தமிழக அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலை கொள்வதாக தெரியவில்லை. சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரே இரவில் மட்டும், எட்டு கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருட்டு நடந்துள்ளது.
கோவிலை குறிவைத்து நடக்கும் குற்ற செயல் நாளுக்குநாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கோவில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட வேண்டும். கோவில் பாதுகாப்பு போலீசார் என, பிரத்யேகமான காவல்படை உருவாக்கப்பட வேண்டும்.
அறநிலையத் துறை, வருமானத்தை மட்டும் குறிக்கோளாய் கொண்டு செயல்படாமல், கோவில்களின் பாதுகாப்புக்கும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.