/உள்ளூர் செய்திகள்/தேனி/ துணை சுகாதர நிலையம் முன் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் அவதி துணை சுகாதர நிலையம் முன் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் அவதி
துணை சுகாதர நிலையம் முன் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் அவதி
துணை சுகாதர நிலையம் முன் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் அவதி
துணை சுகாதர நிலையம் முன் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 19, 2024 05:32 AM

தேனி : ஊஞ்சாம்பட்டி ஊராட்சி துணை சுகாதர நிலையம் முன் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு நிலவி மக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். முறையாக குடிநீர் வழங்காததால் உவர்ப்பு நீரை குடிநீராக பயன்படுத்தும் நிலை உள்ளது.
தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 4 வார்டில் கிழக்குத்தெருவில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த சரண்யா, முருகேஸ்வரி, ராஜேஸ்வரி, போஸ், ராஜம்மாள் குடியிருப்போர் குரல் பகுதிக்காக கூறியதாவது:
கிழக்கு தெருவில் முறையான சாக்கடை வசதி செய்யததால் அரசு துணை சுகாதார நிலையம் முன் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்குகிறது. மழைகாலத்தில் இப்பகுதியில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்குகிறது. இப்பகுதியினர் இணைந்து சுகாதார நிலையம் முன் சீரமைத்தாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
துணை சுகாதர நிலையத்திற்கு ரோடு வசதி இல்லாததால் நோயாளிகளை ஆம்புலன்சில் கொண்டு செல்ல, வாகனங்களில் அழைத்து வருவதில் சிரமம் உள்ளது. இப் பகுதியில் தேங்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து குடியிருப்போர் பாதிக்கப்படுகின்றனர். மாலை 6:00 மணிக்கு மேல் கொசுக்கடி தாங்க முடியாத அளவிற்க தொந்தரவு உள்ளது.
இப்பகுதியில் சாக்கடை, ரோடு வசதி இல்லாததால் மழைகாலத்தில் மண்ரோட்டில் பலர் வழுக்கி விழுகின்றனர். குறுக்குத்தெருக்களில் சாக்கடை உள்ளது. அதனை முறையாக துார்வாருவது இல்லை. சாக்கடையில் சேரும் கழிவுகளை அள்ளி அதனருகே போட்டு செல்கின்றனர். சில நாட்களில் அவை மீண்டும் சாக்கடையில் விழுகிறது. குடிநீர் சரியாக வினியோகிப்பது இல்லை. மாதம் இரு முறை மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க உவர்ப்பு நீரான பேர் போர் தண்ணீரை குடிக்கும் நிலை உள்ளது.
தெருவில் அருகே உள்ள சுகாதார வளாகம் முறையாக பராமரிப்பதில்லை. இதனால் பலர் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலையும், வடபுதுப்பட்டி ஊராட்சியில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது.
இத்தெருவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, வீட்டு உபயோகத்திற்காக பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளது. அதற்கு பதிலாக புதிதாக நீர்தேக்க தொட்டி அமைத்து இப்பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இத்தெருவில் வசிப்பவர்கள் பயனடைவர் என்றனர்.