'இடைத்தேர்தலை புறக்கணித்த தி.மு.க., அழிந்தா போனது?'
'இடைத்தேர்தலை புறக்கணித்த தி.மு.க., அழிந்தா போனது?'
'இடைத்தேர்தலை புறக்கணித்த தி.மு.க., அழிந்தா போனது?'
ADDED : ஜூன் 19, 2024 04:00 AM
மதுரை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடாதது குறித்து தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் விமர்சித்தனர்.
இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் மதுரையில் நேற்று கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடாத காரணம் குறித்து பொதுச்செயலர் பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். இருந்தபோதிலும் தொடர்ந்து அவதுாறு கருத்துகளை பரப்பி அதன் வாயிலாக அ.தி.மு.க.,விற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்பதை தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.
அ.தி.மு.க., பல ஆண்டுகளாக பல தேர்தலை சந்தித்து இருக்கிறது. தொடர் வெற்றியை பெற்ற எம்.ஜி.ஆர்., தலைமையில் கூட, 2 எம்.பி.,க்கள் இருந்த காலம் உண்டு.
புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க., புறக்கணிக்கிறது என கருணாநிதி சொன்ன பின், அக்கட்சி அழிந்தா போய்விட்டது? சூழ்நிலைக்கு ஏற்ப கட்சி நிலைப்பாட்டை அறிவிப்பது என்பது தலைவர்களின் ராஜதந்திரம் என்பதை மக்கள் அறிவர்.
பழனிசாமி தொலைநோக்கு சிந்தனையோடு, 2026 இலக்காக வைத்து அறிவித்தது தான் தேர்தல் புறக்கணிப்பு. இது ஒன்றும் தேசவிரோதம் இல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.