Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'தேர்தலில் தனித்து போட்டியிட தைரியமில்லாத கட்சி தி.மு.க.,' வானதி சீனிவாசன் அறிக்கை

'தேர்தலில் தனித்து போட்டியிட தைரியமில்லாத கட்சி தி.மு.க.,' வானதி சீனிவாசன் அறிக்கை

'தேர்தலில் தனித்து போட்டியிட தைரியமில்லாத கட்சி தி.மு.க.,' வானதி சீனிவாசன் அறிக்கை

'தேர்தலில் தனித்து போட்டியிட தைரியமில்லாத கட்சி தி.மு.க.,' வானதி சீனிவாசன் அறிக்கை

ADDED : ஜூன் 17, 2024 02:00 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவை: ''தமிழகத்தில் தனித்து போட்டியிட தைரியமில்லாத ஒரே கட்சி தி.மு.க., தான்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற முடியாது என, கோவை தி.மு.க., பொதுக் கூட்டத்தில் சிலர் பேசியிருக்கின்றனர். ஆனால், கோவையில் போட்டியிட்டு வென்று தான் நான் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். ஆனால், கோவை மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை.

கடந்த 1996ல் பத்மநாபபுரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வென்றபோதே, தமிழகத்தில் பா.ஜ., கால் பதித்துவிட்டது. 2014ல், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாமல் கன்னியாகுமரி தொகுதியில் வென்றது.

தி.மு.க.,வுக்கு எதிரான கட்சிகள் கூட்டணி அமைக்காமல் பிரிந்து போட்டியிட்டதால் தான், தி.மு.க., கூட்டணி 40 இடங்களிலும் வென்றது. 1957ல் இருந்து போட்டியிடும் தி.மு.க., ஒரு தேர்தலில் கூட தனித்து நின்றதில்லை.

தமிழகத்தில் தனித்து போட்டியிட தைரியமில்லாத ஒரே கட்சி தி.மு.க., தான். ஒரு தேர்தலிலாவது தனித்து போட்டியிட்டு வென்று, அதன் பிறகு பா.ஜ.,வை ஸ்டாலின் விமர்சிக்கட்டும்.

கூட்டணி இல்லாமல் வெல்லவே முடியாத தி.மு.க., தனித்து ஆட்சியமைப்பது, மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. இனியாவது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் தி.மு.க., இடம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுங்கள்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us