கோயில் நகைகள் மாயம்; ஸ்தானிகருக்கு முன்ஜாமின்
கோயில் நகைகள் மாயம்; ஸ்தானிகருக்கு முன்ஜாமின்
கோயில் நகைகள் மாயம்; ஸ்தானிகருக்கு முன்ஜாமின்
ADDED : ஜூன் 11, 2024 11:04 PM

மதுரை : ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில், சுவாமி மற்றும் அம்மனுக்கு அணிவிப்பதற்கான மொத்த நகைகளில் 952 கிராம் எடையுள்ள 30 தங்க நகைகள், 1199 கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகள் மாயமாகின. மதிப்பு ரூ.1 கோடி.
தற்போதைய திவான் பழனிவேல் பாண்டியன் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்கு பதியப்பட்டது. அவரது முன்ஜாமின் மனுவை ராமநாதபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர்,'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
'இடைக்கால முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. போலீசில் மனுதாரர் ஆஜராக வேண்டும். போலீசார் ஜூன் 27 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதி பி.புகழேந்தி உத்தரவிட்டார்.