வாலிபர் வெட்டி கொலை:திருப்பூரில் கும்பல் வெறிச்செயல்
வாலிபர் வெட்டி கொலை:திருப்பூரில் கும்பல் வெறிச்செயல்
வாலிபர் வெட்டி கொலை:திருப்பூரில் கும்பல் வெறிச்செயல்
ADDED : ஜூன் 18, 2024 08:29 PM

திருப்பூர்:திருப்பூரில் பேக்கரியின் வெளியே அமர்ந்திருந்த வாலிபரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், கோல்டன் நகர், கருணாகரபுரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; பனியன் தொழிலாளி. இன்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட்டு விட்டு வெளியே அமர்ந்திருந்தார். அங்கு இரு டூவீலரில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் வாலிபரை சுற்றி வளைத்து அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு விட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து வாலிபர் அதே இடத்தில் இறந்தார். தகவலறிந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி சென்ற கும்பல் குறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.