Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ADDED : ஜூன் 27, 2024 10:41 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உள்ளது என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

* திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இதில் தொழில்துறை முதன்மையானது.

* ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உள்ளது. மோட்டார் வாகனங்கள், மின்னணு உதரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

* புத்தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

* மின் வாகனங்கள் உற்பத்தியில் ஓசூர் முக்கிய பங்காற்றி வருகிறது.

விமான நிலையம்

* ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது. ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

* ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது.

நூலகம்


* கோவையில் இளைய தலைமுறைகள் பயன்படும் வகையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும்.

* மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியிலும் கருணாநிதி பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us