தடம் மாறும் தமிழகம்: ஹிந்து முன்னணி வேதனை
தடம் மாறும் தமிழகம்: ஹிந்து முன்னணி வேதனை
தடம் மாறும் தமிழகம்: ஹிந்து முன்னணி வேதனை
ADDED : ஜூன் 21, 2024 05:04 AM

திருப்பூர்: 'அரசின் தவறான செயல்பாட்டால், தமிழகம் தடம் மாறிப் போகிறது' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
விலை மலிவான போதை அதிகமாக, எதை வேண்டுமானாலும் நாடும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. வாலிபர்கள் போதைக்கு அடிமையாகி பொன்னான எதிர்காலத்தை இழந்து நடைபிணமாக வாழ்கின்றனர்.
கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, அதிலும், சாராயத்தை விற்றவருக்கும் அரசு 10 லட்சம் ரூபாயை வாரி வழங்கியது. இதனால் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை தான் ஊக்கம் பெற்றது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு ஏன் என்று தமிழக அரசு சிந்தித்ததா? உயிர்கள் போன பின்பு நடவடிக்கை என்பது, கண்துடைப்பு நாடகம்.
பீஹாரிலும், குஜராத்திலும் மது வருமானம் இல்லாத ஆட்சி நடக்கிறது. தமிழகமோ மீளமுடியாத அளவு போதையில் செல்கிறது. மது ஆலைகளை நடத்தும் அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பினாமிகளால் தமிழகம் சீரழிந்து வருகிறது.
தமிழக அரசு மது விற்பனையை அதிகப்படுத்தச் சிந்திப்பதை நிறுத்தி, போதை மறுவாழ்வு இல்லங்களை மாவட்டந்தோறும் திறந்தாக வேண்டியது அவசியம். முதலில் போதையில் வீழ்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்துடைப்பு நாடகம் நடத்துவது மட்டும் இதற்குத் தீர்வு தராது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.