Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மஞ்சளாறு அணையில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை 40 ஆண்டுகளில் முதன் முறையாக ஜூனில் நிரம்பியது

மஞ்சளாறு அணையில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை 40 ஆண்டுகளில் முதன் முறையாக ஜூனில் நிரம்பியது

மஞ்சளாறு அணையில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை 40 ஆண்டுகளில் முதன் முறையாக ஜூனில் நிரம்பியது

மஞ்சளாறு அணையில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை 40 ஆண்டுகளில் முதன் முறையாக ஜூனில் நிரம்பியது

ADDED : ஜூன் 21, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
தேவதானப்பட்டி: மஞ்சளாறு அணை நீர்மட்டம் 40 ஆண்டுகளில் முதன்முறையாக ஜூன் மாதத்தில் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது.

முருகமலை, வரட்டாறு, இருட்டாறு, தலையாறு, பெருமாள்மலை பகுதிகளிலும் மஞ்சளாறு நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்துள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. பாதுகாப்பு கருதி 55 அடி மட்டுமே நீர் தேக்க முடியும். மே 30 ல் 51 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஜூன் 5 ல் 53 அடியை எட்டியதால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று முன்தினம் கொடைக்கானல் மலை அடிவாரம் பெருமாள் மலையில் மழை பெய்ததால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று மதியம் 12:00 மணிக்கு அணை நீர்மட்டம் 55 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 94 கன அடி நீர் வரத்து ஏற்பட்டது.

மஞ்சளாறு கரையோரப் பகுதி மக்களுக்கு 3 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அணையின் இரு கண் மதகு வழியாக வினாடிக்கு 94 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நான்கு கண் மதகு வழியாக நீர் வெளியேற்றப்படும்.

40 ஆண்டுகளில் முதல் பதிவு


மஞ்சளாறு அணை வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் அணை நிரம்பி அக்டோபர் 15 முதல் மார்ச் 15 வரை 150 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக தற்போது ஜூன் மாதம் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது. அணை பாசனத்திற்கு திறக்கப்படும் நீரினால் மஞ்சளாறு, தேவதானப்பட்டி, ஜி. கல்லுப்பட்டி உட்பட தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, தும்மலப்பட்டி, குன்னுவாரன்கோட்டை பகுதிகளில் 2111 ஏக்கர் என மொத்தம் 5259 ஏக்கர் பாசன பயன்பெறும். தற்போது உபரிநீராக செல்வதால் இரு மாவட்ட விவசாயத்திற்கு பயன்பெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us