பிளஸ் 1 மாணவி கர்ப்பம்; 10ம் வகுப்பு மாணவன் கைது
பிளஸ் 1 மாணவி கர்ப்பம்; 10ம் வகுப்பு மாணவன் கைது
பிளஸ் 1 மாணவி கர்ப்பம்; 10ம் வகுப்பு மாணவன் கைது
ADDED : ஜூன் 02, 2024 11:25 PM
கரூர் : கரூர் அருகே, பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய, 10ம் வகுப்பு மாணவனை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், ஈசநத்தம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுவன், பிளஸ் 1 மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளான். இந்நிலையில், மாணவி கர்ப்பமானார்.
இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய கரூர் ரூரல் போலீசார், போக்சோ சட்டத்தில் மாணவனை கைது செய்தனர்.