ஜூஸ் வடிவிலான மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது
ஜூஸ் வடிவிலான மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது
ஜூஸ் வடிவிலான மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது
ADDED : ஜூன் 06, 2024 11:01 PM

திண்டுக்கல்:பெங்களூருவிலிருந்து விற்பனைக்காக திண்டுக்கல் வழியாக ஆம்னி பஸ்சில் ஜூஸ் வடிவிலான மது பாட்டில்களை மதுரைக்கு கடத்தி
வந்த 5 வாலிபர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மதுரையை சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் 24, ஹரிஹரசுதன்29, தங்கபாண்டி26,பழனிகுமார்30,திலிபன்25 ஆகியோர் நேற்று முன்தினம் பெங்களூருவிலிருந்து புரூட்டி ஜூஸ் பாட்டில்கள் உருவத்திலிருக்கும் மது பாட்டில்களை 15 பெட்டிகளில் வாங்கி மதுரைக்கு கடத்தி வருவதற்காக வாங்கினர். தொடர்ந்து ஐவரும் மது பாட்டில்களுடன் பெங்களூரு டூ மதுரை செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் ஏறி
திண்டுக்கல் வழியாக மதுரை செல்ல வந்தனர். நேற்று காலை திண்டுக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி,எஸ்.ஐ.முத்துக்குமார்,சுரேஷ்,மெருண் உள்ளிட்ட போலீசார் கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில்
ஈடுபட்டனர். பெங்களூரு பதிவு எண் கொண்ட தனியார் ஆம்னி பஸ்சை கண்டதும் போலீசார் உள்ளே ஏறி சோதனை செய்தனர்.அப்போது அங்கிருந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐவரும் போலீசாரை கண்டதும் முன்னுக்கு பின்னாக பதில் கூறி சந்தேகத்திற்குரிய
அடிப்படையில் அமர்ந்திருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ.40 ஆயிரம் மதிப்பில் 5 பெட்டிகளில் புரூட்டி ஜூஸ் வடிவிலான மது பாட்டில்கள் இருந்ததும் அவைகளை விற்பனை செய்வதற்காக மதுரைக்கு
கடத்தி செல்வதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஐவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல்
செய்து விசாரிக்கின்றனர்.