திருச்செந்துாரில் கடல் சீற்றம்; 10 பேருக்கு காயம், கால் முறிவு
திருச்செந்துாரில் கடல் சீற்றம்; 10 பேருக்கு காயம், கால் முறிவு
திருச்செந்துாரில் கடல் சீற்றம்; 10 பேருக்கு காயம், கால் முறிவு
ADDED : ஜூன் 03, 2024 04:07 AM

திருச்செந்துார் : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவது வழக்கம். விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிக கூட்டம் காணப்பட்டது. ஜூன் 6ல் அமாவாசை என்பதால் நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் கடலில் குளித்த போது அலையின் வேகத்தால் சிலர் கரைக்கு துாக்கி வீசப்பட்டனர். இதில், பாறைகளில் மோதி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம், 64, கரூரைச் சேர்ந்த தங்கம், 54, உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
சிலருக்கு கால் எலும்பு முறிவும், கால் சுளுக்கும் ஏற்பட்டது. அவர்களை, கோவில் கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக மீட்டு முதலுதவி மருத்துவ மையத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்செந்துார் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.