தடுப்பூசி தயாரிப்பு நெறிமுறை கருத்து கூற வேண்டுகோள்
தடுப்பூசி தயாரிப்பு நெறிமுறை கருத்து கூற வேண்டுகோள்
தடுப்பூசி தயாரிப்பு நெறிமுறை கருத்து கூற வேண்டுகோள்
ADDED : ஜூன் 03, 2024 06:05 AM
சென்னை : தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தடுப்பூசி வினியோக நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ராஜிவ்சிங் ரகுவன்ஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், சட்ட விதிகளுக்கு உட்பட்டும், உரிய துறைகளுடன் ஆலோசித்தும், தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த வரைவு வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளது.
மருந்து நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள, இந்த நெறிமுறைகள் குறித்த ஆலோசனைகள், கருத்துக்கள், ஆட்சேபனைகளை, மருந்து உற்பத்தி நிறுவனங்கள், சுகாதாரத் துறையினர், துறைசார் வல்லுனர்கள் வழங்கலாம். அவற்றை, psur.drugs@cdsco.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும். அவை பரிசீலிக்கப்பட்டு, நெறிமுறைகளின் இறுதி வடிவம் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.