ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய பழனி கோவில் நிலங்கள் மீட்பு
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய பழனி கோவில் நிலங்கள் மீட்பு
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய பழனி கோவில் நிலங்கள் மீட்பு
ADDED : ஜூன் 03, 2024 06:05 AM

பழனி : திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட, பல்வேறு பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் கிரி வீதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவில் அகற்றப்பட்டு, தனியார் வாகன பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. மூன்று மாதங்களாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், கோவில் நிர்வாகம் துரிதமாக செயல்படுகிறது.
பாலசமுத்திரம், அய்யம்பள்ளி விநாயகர் கோவில் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பகுதிகளை சீர் செய்து, மே 3ல் கும்பாபிஷேகம் நடந்தது.
பழனி பாளையம் பகுதியில் விநாயகர் கோவில் முன் இருந்த, நான்கு கோவில் கடைகளை இடித்து அப்புறப்படுத்தி, மே 3ல் கும்பாபிஷேகம் நடந்தது.
பழனி பெரிய கடை வீதியில் உள்ள, வேணு கோபால சுவாமி கோவிலின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தி, கும்பாபிஷேக பணிகள் நடக்கின்றன. இதேபோல் வடக்கு கிரி வீதி, சவுராஷ்ட்ரா மடம் எதிரிலிருந்த ஆக்கிரமிப்புகள், ஈரோடு மடம், தெற்கு கிரி வீதியில் சாது சாமிகள் மடம், மேற்கு வீதி, ஹரிசன சேவா சங்கம், தெற்கு கிரி வீதி, பழைய நாதஸ்வர பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு, அப்பகுதி புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
பாத விநாயகர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் அருகிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவில் கும்பாபிஷேக பணிகள் நடக்கின்றன.
கோவில் துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.