விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கையா? எந்த புகாரும் வரவில்லை என்கிறார் சத்யபிரதா சாகு
விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கையா? எந்த புகாரும் வரவில்லை என்கிறார் சத்யபிரதா சாகு
விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கையா? எந்த புகாரும் வரவில்லை என்கிறார் சத்யபிரதா சாகு
ADDED : ஜூன் 06, 2024 03:19 PM

சென்னை: 'விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை' என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
''விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க.,வின் விஜயபிரபாகர் தோற்கடிக்கப்படவில்லை. சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு உள்ளார். அங்கு மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்'' என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியிருந்தார்.
மறு ஓட்டு எண்ணிக்கையா?
இது தொடர்பாக, சத்யபிரதா சாகு நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்துவது தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை. மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடுவதே முறை.
45 நாட்கள்
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரிலேயே மறு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடைபெற்று 45 நாட்களுக்கு பதிவான ஓட்டுகள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தல் ஆணைய முடிவுகளில் சந்தேகம் இருந்தால் உயர்நீதிமன்றத்தை தான் நாட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.