சூரியசக்தி மின் உற்பத்தியில் ராஜஸ்தான் தான் 'டாப்!'
சூரியசக்தி மின் உற்பத்தியில் ராஜஸ்தான் தான் 'டாப்!'
சூரியசக்தி மின் உற்பத்தியில் ராஜஸ்தான் தான் 'டாப்!'
ADDED : ஜூலை 19, 2024 12:41 AM
சென்னை:தமிழகத்தில் கடந்த ஜூன் நிலவரப்படி, நிலம் மற்றும் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் அமைப்புகளின் திறன், 8,617 மெகா வாட்டாக உள்ளது; எனினும் ராஜஸ்தான் தான் இதில், 'டாப்!'
தமிழகத்தில், சூரிய ஒளி மூலம், 300 நாட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும். மேலும், இதற்கான மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு மானியமும் தருகிறது.
எனவே, வீடுகளில் 1 மெகாவாட்டுக்கு மேற்பட்ட திறனுள்ள அமைப்புகளை நிறுவ, தனியார் ஆர்வம் காட்டுகின்றனர். இதன்படி, தரையில் நிறுவப்பட்டுள்ள அமைப்புகளில், 7,872 மெகாவாட்டும், மேற்கூரையில் 679 மெகா வாட்டிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயிகளும், 66 மெகா வாட் திறனுள்ள மின் அமைப்புகளை நிறுவியுள்ளனர்.
எனினும், சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவியுள்ள மாநிலங்களில், ராஜஸ்தான், 22,415 மெகா வாட் என, முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில், 14,358 மெகா வாட் என குஜராத்தும், கர்நாடகா, 8,819 மெகா வாட் என கர்நாடகமும், முறையே 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளன.
இத்தகவலை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை வெளியிட்டு உள்ளது.