முதல்வர் நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
முதல்வர் நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
முதல்வர் நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
ADDED : ஜூலை 19, 2024 12:41 AM
சென்னை:முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் அனைத்தும், நேற்று ரத்து செய்யப்பட்டன.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், 264 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, 956 புதிய வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கல்வி வளாகம், 25 மாவட்டங்களில், 69 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, 441 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடங்கள் ஆகியற்றை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் திறந்து வைக்க இருந்தார்.
நேற்று காலை 10:00 மணியளவில், இந்நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.