ADDED : ஜூன் 09, 2024 06:45 AM

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை.
தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று முதல் 14ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
வரும் 12ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 1 - 2 டிகிரி செல்ஷியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் மேக மூட்டமாக காணப்படும்.
தமிழகத்தில் நேற்று காலையுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் 13 செ.மீ., மழை பெய்தது. அதற்கு அடுத்தபடியாக ராணிப்பேட்டை அம்மூரில் 8; அரக்கோணம், திருத்தணி, ஆற்காடு பகுதிகளில் தலா 7 செ.மீ., மழை பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.