பிரதமர் பதவி: என் உயரம் எனக்கு தெரியும்:ஸ்டாலின் பதில்
பிரதமர் பதவி: என் உயரம் எனக்கு தெரியும்:ஸ்டாலின் பதில்
பிரதமர் பதவி: என் உயரம் எனக்கு தெரியும்:ஸ்டாலின் பதில்
UPDATED : ஜூன் 04, 2024 07:48 PM
ADDED : ஜூன் 04, 2024 07:17 PM

சென்னை பிரதமர் பதவி குறித்த கேள்விக்கு என் உயரம் எனக்கு தெரியும் என பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல உள்ளதாக கூறினார்.
தேர்தல் முடிவை அடுத்து அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார் முதல்வர் ஸ்டாலின் . தொடர்ந்து அவர் பேசியதாவது: திமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. வெற்று பரப்புரைகளுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு இந்த வெற்றி .
இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் திமுக தொடர்ந்து பங்காற்றும். பா.ஜ.,வின் பண பலம் தேர்தலில் எதிரொலிக்க வில்லை, பிரதமர் பதவி பற்றிய கேள்விக்கு என் உயரம் எனக்கு தெரியும் என்றார். 400 இடங்களில் வெற்றி பெறுவோம்என கூறிய பா.ஜ.,வால் பெரும்பான்மை கூட பெற முடியவில்லை, மேலும் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.