சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது
ADDED : ஜூலை 15, 2024 10:13 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34). மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் நண்பரின் மகளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஜூலை 8ம் தேதி நண்பரின் மகளான 16 வயது சிறுமியை காவலர் குடியிருப்புக்கு வரவழைத்த திருநாவுக்கரசு அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் திருநாவுக்கரசை போலீசார் கைது செய்தனர்.