ஜூன் 18ல் பிளஸ் 2 மறுமதிப்பீடு 'ரிசல்ட்'
ஜூன் 18ல் பிளஸ் 2 மறுமதிப்பீடு 'ரிசல்ட்'
ஜூன் 18ல் பிளஸ் 2 மறுமதிப்பீடு 'ரிசல்ட்'
ADDED : ஜூன் 15, 2024 02:25 AM
சென்னை:பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் வரும் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளில் சில பாடங்களில் மதிப்பெண் மாற்றம் இருப்பது குறித்து மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் விபர பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 18ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும்.
பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மறுகூட்டல் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் தங்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை 19ம் தேதி பிற்பகல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வு தேதி குறித்த விபரங்களை தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும்.