/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ விடுமுறைக்காக இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு விடுமுறைக்காக இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு
விடுமுறைக்காக இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு
விடுமுறைக்காக இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு
விடுமுறைக்காக இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு
ADDED : ஜூன் 15, 2024 02:25 AM
வேலுார்:வேலுார் காட்பாடி அருகே பள்ளி விடுமுறைக்காக தனியார் பள்ளிக்கு இ - மெயிலில் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மாணவனிடம் போலீசார் விசாரித்தனர்.
வேலுார் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தனியார் பள்ளியான சிருஷ்டி குழுமம் உள்ளது. இங்கு 2 000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு நேற்று முன்தினம் இரவு இ - மெயில் வந்தது.
அதில் வகுப்பறைகளில் 28 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது என மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாக தலைவர் சரவணன் போலீசில் புகார் அளித்தார்.
காட்பாடி போலீசார் விசாரித்ததில் அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவரின் இ - மெயில் முகவரியில் இருந்து வந்தது தெரிந்தது.
பின்னர் மாணவரிடம் நடத்திய விசாரணையில் சமீபத்தில் தியேட்டரில் வெளியான 'ஸ்டார்' திரைப்படத்தை பார்த்து தனக்கு விடுமுறை வேண்டு மென்பதால் விளையாட்டுத்தனமாக இ - மெயிலை அனுப்பியதாக கூறினார்.
இதையடுத்து மாணவரிடம் இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது என போலீசார் எச்சரித்து அறிவுரை கூறினர்.
இதனால் நேற்று பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.