பி.எப்.ஐ., நிர்வாகி சொத்து முடக்கம்
பி.எப்.ஐ., நிர்வாகி சொத்து முடக்கம்
பி.எப்.ஐ., நிர்வாகி சொத்து முடக்கம்
ADDED : ஜூன் 08, 2024 01:36 AM
சென்னை,:கோவை ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான, பி.எப்.ஐ., நிர்வாகியின் சொத்துக்கள, என்.ஐ.ஏ., அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
கோவையைச் சேர்ந்த ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார், 35; துடியலுார் காவல் நிலைய எல்லையில், 2016 செப்., 22ல், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து, கோவையை சேர்ந்த சதாம் உசேன், 27; முபாரக், 29 உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.
அவர்கள், 'பி.எப்.ஐ., எனும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் சுபேர், 28, என்பவர், 2012ல் வாங்கிய சொத்து ஒன்றை, 2020ல், அவரது தாய்க்கு 'செட்டில்மென்ட்' செய்து கொடுத்துள்ளார்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபின், இந்த சொத்து மாற்றம் நடந்துள்ளதால், அதை பறிமுதல் செய்ய, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் உத்தரவு பெற்றனர்.
அதன் அடிப்படையில், கோவையில் உள்ள சுபேரின் அசையா சொத்தை முடக்கி உள்ளனர். இதன் மதிப்பை வெளியிட, என்.ஐ.ஏ., அதிகாரிகள் மறுத்து விட்டனர்.