ADDED : ஜூன் 08, 2024 01:36 AM
சென்னை:''தமிழகம் முழுதும் வக்பு நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.
சென்னையில் வக்பு வாரிய நிலங்களை அளவீடு செய்து முறைப்படுத்துவது மற்றும் மறு சர்வே செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடந்தது. கூட்டம் குறித்து, அவர் கூறியதாவது:
ஸ்டாலின் முதல்வராகி மூன்று ஆண்டுகளாகிறது. தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க, வக்பு வாரிய நிலங்களை முறைப்படுத்தி உரிமைப்படுத்த, வக்பு நிலங்களை நில அளவை செய்ய, அரசு சார்பில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுதும், வக்பு நிலங்கள் அளவீடு செய்யப்படும். தனியாரிடம் உள்ள வக்பு வாரிய நிலங்களை, அவர்களிடம் இருந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.