நீட் தேர்வில் இரு வகையான வினாத்தாள்கள் பாதிக்கப்பட்ட மாணவர் கலெக்டரிடம் மனு
நீட் தேர்வில் இரு வகையான வினாத்தாள்கள் பாதிக்கப்பட்ட மாணவர் கலெக்டரிடம் மனு
நீட் தேர்வில் இரு வகையான வினாத்தாள்கள் பாதிக்கப்பட்ட மாணவர் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 11, 2024 04:35 AM

துாத்துக்குடி : நாடு முழுதும் மே 5ல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. துாத்துக்குடி மாவட்டத்தில் அழகர் பப்ளிக் பள்ளி, ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி பள்ளி மையங்களில் இரு வகையான வினாத்தாள் வழங்கப்பட்டது. சிலருக்கு கியூஆர், எஸ்.டி., என்ற கியூஆர் கோடுகளுடன் 28 பக்கங்கள் கொண்ட வினாத்தாளும், சிலருக்கு எம், என், ஓ, பி, என்ற கியூஆர் கோடுகளுடன் 32 பக்கங்கள் கொண்ட வினாத்தாளும் வழங்கப்பட்டன.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. இந்நிலையில், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பெற்றோருடன் நேற்று முற்றுகையிட்டனர்.
கலெக்டரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:
ஒரே தேர்வுக்கு இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்பட்டது தொடர்பாக இதுவரை எவ்வித விளக்கமும் தேசிய தேர்வு முகமை அளிக்கவில்லை. மாறுபட்ட வினாத்தாள் வழங்கியவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளதால் மருத்துவப் படிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
எம், என், ஓ, பி, என்ற கியூஆர் கோடுகளுடன் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் தேர்வு முகமை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு தனி 'கட் - ஆப்' மற்றும் கவுன்சிலிங் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.