'அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது!'
'அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது!'
'அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது!'
ADDED : ஜூன் 15, 2024 01:06 AM
சென்னை:''மருத்துவப் படிப்பை நிறைவு செய்த டாக்டர்கள், அரசுக்கு பணிக்கு விரும்பி வர வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அழைப்பு விடுத்தார்.
சென்னை மருத்துவக் கல்லுாரியின், 188வது பட்டப்படிப்பு நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் சுப்பிரமணியன், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
வெளிப்படை தன்மை
பின், அவர் அளித்த பேட்டி:
மருத்துவப் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. மூன்று மாதங்களுக்கு முன், 1,021 டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. காலியாக உள்ள, 2,553 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இத்தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்கும்; எவ்வித சிபாரிசும் இல்லை. தகுதி அடிப்படையில் டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவர்.
புதிதாக பட்டம் பெறுபவர்கள், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் பதிவு செய்ய வேண்டும். அப்பணிகளை விரைந்து மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், குறைகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
அரசு பணிக்கு வாங்க
சுகாதார திட்டங்களை மக்களிடையே நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில், பட்டம் பெற்றவர்கள் அரசு பணிக்கு வந்து சேவையாற்ற வேண்டும்.
அனைத்து மக்களும் எளிய வகையில் மருத்துவ வசதிகளை பெற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனை மோகம் குறைந்து, அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.