பத்திரப்பதிவு நாளிலேயே பட்டா பெயர் மாற்றம்
பத்திரப்பதிவு நாளிலேயே பட்டா பெயர் மாற்றம்
பத்திரப்பதிவு நாளிலேயே பட்டா பெயர் மாற்றம்
UPDATED : ஜூன் 15, 2024 04:42 AM
ADDED : ஜூன் 15, 2024 01:05 AM

சென்னை:பத்திரப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே, பட்டாவில் தானியங்கி முறையில் பெயர் மாற்றம் செய்வது அமலுக்கு வந்துள்ளது.
தானியங்கி முறையில், பட்டாவில் பெயர் மாற்றத்துக்கான வசதி, வருவாய்த் துறை இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.
இதில், சொத்து உரிமையாளர்கள் அளிக்கும் அடையாள சான்றுகள், மொபைல் போன் எண்கள் சரியாக இருக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக, சார் -- பதிவாளர் அலுவலகங்களில் இதற்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று முதல் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உட்பிரிவுக்கான தேவை இல்லாத சொத்துக்களை வாங்குவோருக்கு, தானியங்கி முறையில் பட்டா மாறுதலை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட அலுவலகங்களில், பத்திரப்பதிவு முடிந்து அசல் ஆவணம் ஒப்படைக்கப்படும் சமயத்தில், பட்டா பெயர் மாற்றத்துக்கான தகவல் வருகிறது.
இதன் அடிப்படையில், பொதுமக்கள் இணையதளத்தில் இருந்து பெயர் மாற்றப்பட்ட பட்டாவின் பிரதியை சில மணி நேரத்திலேயே எடுத்துக் கொள்ள முடிகிறது.
சென்னையில் சோழிங்கநல்லுார் தாலுகாவிலும் இதேபோன்று, உடனுக்குடன் பட்டா பெயர் மாற்றப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.