/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குடிநீர் குழாயை அத்துமீறி துண்டிப்பதா? அமைச்சர்களிடம் முறையிட்ட பெண்கள் குடிநீர் குழாயை அத்துமீறி துண்டிப்பதா? அமைச்சர்களிடம் முறையிட்ட பெண்கள்
குடிநீர் குழாயை அத்துமீறி துண்டிப்பதா? அமைச்சர்களிடம் முறையிட்ட பெண்கள்
குடிநீர் குழாயை அத்துமீறி துண்டிப்பதா? அமைச்சர்களிடம் முறையிட்ட பெண்கள்
குடிநீர் குழாயை அத்துமீறி துண்டிப்பதா? அமைச்சர்களிடம் முறையிட்ட பெண்கள்
ADDED : ஜூன் 15, 2024 12:56 AM

அவிநாசி;அவிநாசி, சூளையில், சோலை நகர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. பராமரிப்பு செலவுக்காக, ஒவ்வொரு வீட்டிலும் குறிப்பிட்ட தொகையை, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வசூல் செய்து வருகின்றனர்.
குடியிருப்பில் வசிக்கும் சிலர், சந்தா தொகையை செலுத்தாமல் இருந்துள்ளனர். சங்க நிர்வாகிகள் சந்தா தொகையை செலுத்தாத குடியிருப்பு வாசிகளின் குடிநீர் குழாயை துண்டித்துள்ளனர்.
குடிநீர் இல்லாமல் அவதிப்பட்ட பொதுமக்கள், அவிநாசிக்கு வந்த அமைச்சர்கள் வேலு மற்றும் சாமிநாதனிடம் இதுகுறித்து முறையிட்டனர். அருகிலிருந்த பேரூராட்சி தலைவர் தனலட்சுமியிடம், 'உடனடியாக குடிநீர் குழாயின் இணைப்பை சரி செய்து கொடுத்து, குடிநீர் குழாயை துண்டித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
எம்.எல்.ஏ., செல்வராஜ், ''குடிநீர் குழாயை துண்டிப்பதற்கு அதிகாரம் இல்லை. யார் தவறு செய்திருந்தாலும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.