/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுடுநீர் ஊற்றிய மூதாட்டிக்கு 3 மாதம் சிறை தண்டனை சுடுநீர் ஊற்றிய மூதாட்டிக்கு 3 மாதம் சிறை தண்டனை
சுடுநீர் ஊற்றிய மூதாட்டிக்கு 3 மாதம் சிறை தண்டனை
சுடுநீர் ஊற்றிய மூதாட்டிக்கு 3 மாதம் சிறை தண்டனை
சுடுநீர் ஊற்றிய மூதாட்டிக்கு 3 மாதம் சிறை தண்டனை
ADDED : ஜூன் 15, 2024 12:53 AM
திருப்பூர்;ஊத்துக்குளி சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்லம்மாள், 70. உடல்நலக்குறைவு காரணமாக, வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். பக்கத்து வீட்டைச்சேர்ந்த பொன்னம்மாள்,72 என்பவருக்கும், செல்லம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் கொட்டுவதால் வீட்டு சுவர் நனைத்து பாதிப்படைவதாக செல்லம்மாள் சத்தம்போட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பொன்னம்மாள், சுடுநீரை கொண்டுவந்து, செல்லம்மாள் மீது கொட்டியுள்ளார். இதில், உடல் வெந்து செல்லம்மாள் இறந்தார்.
ஊத்துக்குளி போலீசார், கொலை குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பொன்னம்மாளை கைது செய்து சிறையி லடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
வயது முதிர்வைக் கருத்தில் கொண்டு பொன்னம்மாளுக்கு 3 மாதம் சிறைதண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு அளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.