கண் மருத்துவ நிபுணர்கள் மாநாடு 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கண் மருத்துவ நிபுணர்கள் மாநாடு 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கண் மருத்துவ நிபுணர்கள் மாநாடு 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : ஜூலை 10, 2024 01:39 AM
சென்னை:கண் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் வருடாந்திர மாநாடு, சென்னையில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
'இன்ராகுலர் இம்பிளான்ட் மற்றும் ரிப்ராக்டிவ் சொசைட்டி' என்ற, ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ., அமைப்பின் வருடாந்திர மாநாடு, சென்னையில் ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில், கடந்த, 6, 7ம் தேதிகளில் நடந்தது.
ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ., தலைவர் ஐ.சுந்தரம், பொதுச்செயலர் டாக்டர் அமர் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டை துவக்கி வைத்த, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில், ''கண் மருத்துவ சிகிச்சைக்கான தொழில்நுட்பம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. கண் மருத்துவத்தில் அதிக நிபுணர்கள் உருவாவது மன நிறைவு தருகிறது. உயர்தரமான கண் சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்,'' என்றார்.
கண்களில் லென்ஸ் உள்வைப்பு, லேசிக் ஒளி விலகல் அறுவை சிகிச்சை துறைகளைச் சேர்ந்த, 50 மருத்துவ நிபுணர்கள் உள்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள், மாநாட்டில் பங்கேற்றனர். கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மருத்துவ நிபுணர்களுக்கு, விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
கண் மருத்துவ பிரீமியர் லீக், ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ., திரைப்பட விழா விருதுகள், நிழற்படப் போட்டி, கருத்தரங்கு, இளம் கண் மருத்துவர்களுக்கான அமர்வுகள், கண் மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கான வர்த்தக பகுதி ஆகியன, மாநாட்டில் இடம் பெற்றன.
மாநாட்டின் தொடக்க விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.